இலங்கையின் தரைகீழ் நீர்வளத்தின் பரம்பல், முக்கியத்துவம் , தீர்மானிக்கும் காரணிகள் பற்றி ஆதாரங்களுடன் விபரிக்குக.
நீர் என்பது மனிதனது அடிப்படை தேவைகளுள் மிக
முக்கியமான விடயமாக காணப்படுகின்றது. இரண்டு ஐதரசன் கூறுகளையும் ஒரு ஒக்சிசன்
அனுவையும் கொண்டு உருவான நீரானது தின்ம , திரவ மற்றும் வாயு நிலையில் புவி மேற்பரப்பில் “நீரியல் வட்ட” செயன்முறை மூலம்
பரந்து காணப்படுகின்றது. 71% நீரினால் சூழப்பட்ட புவியில் மனித தேவைக்கு
பயன்படுத்த கூடிய நீரின் அளவு மிக குறைவாகும். சமுத்திர நீராகவும், பணிபடலங்கலாகவும், ஆறுகள் மற்றும்
ஏரிகளிலும் , நிலத்தடி நீராகவும் பரவி காணப்படுகிறது.
உலகளாவிய ரீதியில் இப்படி இருக்க இலங்கையை
நோக்கும் போது நீர் வளம் ஒப்பிட்டளவில் உயர்வாக இருக்கும் ஒரு நாடக காணப்படுகிறது.
தீவாக காணப்படும் இலங்கையானது அயன மண்டல பிரதேசமாக இருப்பதால் உயர் வெப்பநிலை
மற்றும் உயர் மழைவிழ்ச்சியை பெறுவதோடு, வடகீழ் மாறும்
தென்மேல் பருவக்காற்று மழை, மேற்காவுகை மழை மற்றும்
சூராவளி மழை போன்றவற்றின் காரணமாக நாடளாவிய ரீதியில் வருடாந்தம் சிறந்த மழையை
பெறுகிறது. அந்த வகையில் நோக்கும் போது இலங்கையினது மேற்பரப்பு மற்றும் தரைகீழ்
நீரானத பலவாறு பரந்து காணப்படுகின்றது.இலங்கையின் மேற்பரப்பு நீர் மொத்த நிலமேற்பரப்பில் அண்ணளவாக 2.46% ஆக காணப்படுகின்றதாக MDPI தரவுகள் கூறுகின்றன. தரைகீழ் நீரைப் பொறுத்தவரை, இலங்கையில் 8 சதுர
கிலோமீட்டர் இருப்பதாக
மதிப்பிடப்பட்டுள்ளது.
முதலில் நிலகீழ் நீர் என்றால் என்ன என்று
நோக்குவோமாயின் மழை நீர் மற்றும் நீர் பாசனம் மூலமாக நிலத்துக்கு கிடைக்கும் நீர்
மண் வழியாக கீழ் நோக்கி கசிகிறது அல்லது கீழ் வடிகிறது. அங்கு மயிர்த்துளை நீர்
மண்ணில் காணப்படும் நுண்ணிய இடைவெளிகளுக்கிடையே தங்குவதுடன், ஈர்ப்பு நீர் மேலும் கீழும் செங்குத்தாகவும் கிடையாகவும்
பாய்கிறது. அவ்வாறு இருக்கும் நீர் ஏதேனும் ஊடுருவ முடியாத மண் அடுக்கு அல்லது
பாறைகளை எதிர் கொள்ளும் போது மேலும் கீழ் நோக்கி வருவது தடைப்பட்டு அவ ஊடுருவா
முடியாத மண் அடுக்கு அல்லது பாறைகளை எதிர் கொள்ளும் போது மேலும் கீழ் நோக்கி
வருவது தடைப்பட்டு அடுக்குகளுக்கு மேலே தேங்குகிறது. இதுவே தரைகீழ் நீர் ஆகும்.
அந்தவகையில் இலங்கையில் தரைகீழ் நீர் என்பது
மிக முக்கிய விடயமாக காணப்படுகின்றது. இதற்கு காரணம் இது நாட்டின் பல பகுதிகளில்
குடிநீர் மற்றும் விவசாய தேவைகளுக்குப்
பயன்படுகின்றது. மேற்பரப்பு
நீருடன் ஒப்பிடும் போது நிலக்கீழ் நீரானது ஒரு மறைக்கப்பட்ட வளமாக காணப்படுகின்றது.பண்டைய
காலம் தொடக்கம் இன்று வரை இலங்கையில்
நிலக்கீழ் நீரானது வீட்டு உபயோகத்திற்கும் நீர்ப்பாசனத்திற்கும் பயன்படுத்தப்பட்டு
வருகின்றது அது உயர்தரம் கொண்டதாகவும் வருடம் முழுவதும் நிலையானதாக இருப்பதனால்
80% கிராமப்புற மக்கள் தங்கள் வீட்டு தேவைகளை பூர்த்தி செய்ய நிலக்கீழ் நீரை
பயன்படுத்துகின்றனர்.
அந்தவகையில் இலங்கையில் தரைக்கீழ் நீரானது ஆறு
முக்கிய வகைகளின் கீழ் அடையாளப்படுத்தப்படுகின்றது. அவை:
யாழ்ப்பாணக் குடாநாட்டின் தட்டையான
நிலப்பரப்பானது மணல் மற்றும்
களிமண் அடுக்குகளைக் கொண்டு அமைந்துள்ளது. இங்குள்ள தரைகீழ் நீர் ஆழம் குறைவானதாகவும் , உப்பு நீர் கலப்பு உயர்வானதாகவும் காணப்படுவதுடன் மழைநீரே இதன் முக்கிய
நீர்மூலமாகும். யாழ்ப்பாணக் குடாநாடு மற்றும்
அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பரவி காணப்படும்.
2. ஆழமான மட்டுப்படுத்தப்பட்ட நீர் பரப்பு
3.கடற்கரை மணல் கலந்த மேற்பரப்பு
கடற்கரைப் பகுதிகளில்
காணப்படும் மணல் அடுக்குகளில் உள்ள நீர்ப்பரப்புகளாக இவை காணப்படுகின்றன. இவற்றில்
பெரும்பாலான சமயங்களில் உப்பு நீர் கலப்பு
காணப்பட வாய்ப்பு காணப்படுகின்றது. மழைநீர் மற்றும் கடல் நீரின் ஊடுருவல் போன்றன இதன் நீர்மட்டத்தை பாதிக்கும். இலங்கையின் கடற்கரைப் பகுதிகள் முழுவதும் இவ்வகை தரைகீழ் நீர் பரவி
காணப்படும்.
4.சேற்றுமண் நீர்ப்பரப்பு
சேற்றுமண் அடுக்குகளில் இடையில் காணப்படும் நீர்ப்பரப்புகள் ஆகும் . இவை நீரை
மெதுவாக வெளியிடும் தன்மையுடையவை. நீர் கிடைப்பது மிகவும் குறைவானதாக இருப்பதுடன் தரம் குறைவாகவும் காணப்படும் . கிழக்கு
மற்றும் வடக்கு மாகாணங்களின் சில பகுதிகளில் அதிகமாகவும், மற்ற பகுதிகளில் சிதறலாகவும் காணப்படும்.
5.ஆழமற்ற வீழ்படிவும் பாறை நீர்ப்பரப்பு
ஆறுகள் மற்றும் நீரோடைகள் அரித்துக்
கொண்டு வரும் வண்டல் மற்றும் பாறை அடுக்குகளில் காணப்படும் நீர்ப்பரப்புகள் ஆகும்.
இவற்றின் நீர் வளம் மழையைப் பொறுத்தது. ஆறுகள்
மற்றும் நீரோடைகள் அருகிலுள்ள பகுதிகள், குறிப்பாக வட மத்திய மலைநாடு மற்றும்
மத்திய மலைநாட்டின் சில பகுதிகளில் இவை பரவி காணப்படுகின்றன.
6.தென்மேற்கு கபோக் நீர்ப்பரப்பு
தென்மேற்கு மலைப்பகுதியில் காணப்படும்
பிளவுபட்ட பாறைகளில் உள்ள நீர்ப்பரப்புகள் ஆகும் . மழைநீர் இவற்றில்
சேமிக்கப்பட்டு நீண்ட காலத்திற்கு கிடைக்கும். இவற்றின் பயன்பாடு உயர்வாக காணப்படும். தென்மேற்கு
மலைநாடு, கொழும்பு மற்றும் காலி போன்ற பகுதிகளில்
இதன் பரவலை அவதானிக்கலாம்.
தரைகீழ் நீரின் முக்கியத்துவம்
தரைகீழ் நீர் இலங்கையின் பல பகுதிகளில்
குடிநீர், விவசாயம் மற்றும் தொழில்துறை தேவைகளுக்குப் முக்கிய ஆதாரமாக இருக்கிறது. குறிப்பாக மழை குறைவாக உள்ள
அல்லது வறட்சி நிலவும் பகுதிகளில், தரைகீழ் நீர் மிகவும் முக்கியமான ஒரு வளமாக விளங்குகிறது.
மத்திய மலைநாடுகளில், குறிப்பாக கண்டி மற்றும் கொழும்பு பகுதிகளில், தரைகீழ் நீர் வளங்கள்
ஆழமான பாறைகளில் காணப்படுகிறது. இந்த பகுதிகளில் மஹாவலி ஆற்றின் நீரின் மூலம் aquifers recharge செய்யப்படுவதால், நீரின் தேக்கத்திறன் மிகுந்ததாக இருக்கும்.
மஹாவலி ஆற்றின் நீர் வளம் மட்டுமின்றி, அதன் துணை ஆறுகள் மற்றும் வெள்ளப்பகுதிகளில் தரைகீழ் நீரின்
முக்கிய ஆதாரமாக உள்ளன. இதனால், இந்த நீர் வளங்கள் வறட்சிக்காலங்களில் கூட நீண்ட
காலத்திற்கு நீர் வழங்கும் திறன் கொண்டவையாக காணப்படுகின்றன.
கண்டி மாவட்டத்தில், பெரும்பாலான மக்கள்
உபயோகிக்கும் குடிநீரின் பெரும் பகுதி தரைகீழ் நீர் வளங்களில் இருந்து பெறப்படுகிறது.
இந்த பகுதியில் உள்ள மஹாவலி ஆற்றின் வெள்ளப் பகுதிகள் தரைகீழ் நீரின் முக்கியமான
ஆதாரமாக விளங்குகிறது.ஏனெனில் இந்த ஆற்றின் நீர் நீண்ட காலத்திற்கு நீர் வழங்கல் செய்யும் திறன் கொண்டது.
பசுமை வளம் அதிகம் காணப்படும் மாவட்டங்களான காலி
மற்றும் மாத்தறை பகுதிகளில், தரைகீழ் நீர் வளங்கள் மிக முக்கியமானவையாகும். இவை மழை நீர்
மற்றும் மண் மற்றும் பாறைகளின் தன்மையின் அடிப்படையில் விரிவடையும். இந்த
பகுதிகளில் வனப்பகுதிகள் அதிகமாக உள்ளதால், தரைகீழ் நீரின் வலிமை அதிகரிக்கிறது.
இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில், குறிப்பாக கிளிநொச்சி
மற்றும் வவுனியா மாவட்டங்களில், தரைகீழ் நீர் வளங்கள் கடற்கரை மணல் aquifersகளில் காணப்படுகிறது. இவை
மழை நீர் மற்றும் கடல் நீரின் அடிப்படையில் மீள் வழங்கல் செய்யப்படுவதால், இந்த பகுதிகளில் குடிநீர் தேவைகளைப் பூர்த்தி செய்ய
தரைகீழ் நீர் மிக முக்கியமான ஆதாரமாக உள்ளது.
அதேபோல், யாழ்ப்பாணத்தில் உள்ள சமுத்திர நீர்மட்டம் காரணமாக தரைகீழ் நீர் வளங்களில் சில நேரங்களில்
உப்பு கலக்கைச் சந்திக்க நேரிடும். இதனால், தரைகீழ் நீரை சுத்திகரிக்கும் முறைகள் மிகவும்
அவசியமாகின்றன.
மேலும் கோடை காலங்களிலும் தாவரங்கள் நிலையாக
இருப்பதற்கு இத்தரைக்கீழ் நீர் காரணமாக அமைகின்றது. அதாவது மண்ணினை ஈாழிப்பாக வைப்பதன் மூலம் தாவரத்திற்கு ஊட்டச்சத்தினையும் அளிக்கக்
கூடியதாகவும் மண்ணின் தரத்தினை பாதுகாக்கின்றது. தேயிலை பயிர்ச்செய்கை பரவலாக உள்ள மலைநாட்டில், நிலத்தடி நீர்
மழைப்பொழிவை நிரப்புவதில் குறிப்பிடத்தக்க பங்கை வகிக்கிறது, வறண்ட
மாதங்களிலும் தேயிலை செடிகளின் சீரான வளர்ச்சிக்கு துணைபுரிகிறது.
கரையோர பகுதிகளில் நீரானது உவர் தன்மையை
அடைவதன் காரணமாகவும் சுத்தமான குடிநீர் பெற்றுக் கொள்வதற்காகவும் அதிகமாக தூய நீர்
கொண்ட கொள்கலன்களை கொள்வளவு செய்கின்றனர் எனவே இதற்கு தரைக்கீழ் நீர்
பயன்படுத்தப்படுகிறது. இது மாத்திரமன்றி நீரினை பயன்படுத்தி உற்பத்தி செய்யும்
அதிகமான தொழிற்சார் உற்பத்திகளுக்கு தரைக்கீழ் நீரினை பயன்படுத்துகின்றனர்.
அந்தவைகயில் நோக்கும் போது இலங்கையில் தொழில்துறையிலும் தரைகஈல் நீர்
பயன்படுகின்றது. உணவு மற்றும்
குளிர்பானத் தொழில், ஜவுளித் தொழில், உற்பத்தித் தொழில்கள் & மின் உற்பத்தி போன்றவற்றில் தரைகீழ் நீர் பயன்படுகின்றது.
தரைகீழ் நீர் வளங்களை
தீர்மானிக்கும் காரணிகள்
இலங்கையின் தரைகீழ் நீர் வளங்களை
தீர்மானிக்கும் காரணிகள் பலவாக உள்ளன. அவற்றின் மூலம் நிலத்தின் நீர் சேமிக்கும் திறனை
தீர்மானிக்கின்றது. அவற்றில் சிலவற்றை நோக்குவோமாயின்,
1. புவியியல் அமைப்பு (Geological Structure):நிலத்தின் புவியியல் அமைப்பு தரைகீழ் நீர்
வளங்களை தீர்மானிக்க மிக முக்கிய பங்கு வகிக்கின்றது. இலங்கையின் மத்திய மலைநாடு
பகுதியில் காணப்படும் கற்கொழுந்துகள் மற்றும் பாறைகளால் நிரம்பிய நிலப்பரப்பு, தரைகீழ் நீர் வளத்தை
அதிகமாக சேமிக்க உதவுகிறது. உதாரணமாக, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் உள்ள
மலைப்பகுதிகளில் காயினஸ் மற்றும் நெஸ்சிக்
கற்சாரங்கள் போன்ற ஆழமான
பாறைகளின் கீழ் நீர் சேமிப்பு அதிகமாக உள்ளது.
2. மழை (Rainfall): மழைநீர் தரைகீழ் நீரின் முக்கியமான மூல ஆதாரமாகும். மழை அதிகமாக பொழியும் இடங்களில், நிலத்துக்கு அடியில் நீர்
சேமிப்பது விரைவாக நடைபெறும். உதாரணமாக, தென்மேற்கு பகுதிகளில், குறிப்பாக காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில், தரைகீழ் நீரின் அளவு
மிகவும் அதிகமாக இருக்கும். மழையின் போது நிலம் அதிகமாக ஈரமாகி, தரைகீழ் நீரில் நீர்
சேர்க்கின்றது. மழை குறைவாக உள்ள வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில், வறட்சிக்காலங்களில்
தரைகீழ் நீரின் அளவு குறைவாகவே காணப்படுகிறது, இது பொதுவாக நிலத்தின் நீர் அபிவிருத்திக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது.
3. மனிதச் செயல்பாடுகள் (Human Activities): மனிதன் மேற்கொள்ளும் செயல்பாடுகள், குறிப்பாக விவசாயம்
மற்றும் தொழில்துறை நடவடிக்கைகள், தரைகீழ் நீரின் அளவையும் தரத்தையும் பெரிதும் பாதிக்கின்றன.
கல்பிட்டி மற்றும் புத்தளம் போன்ற கடற்கரை பகுதிகளில் வேளாண்மை அதிகமாக
நடைபெறுவதால், அங்குள்ள மணல் பிரதேசங்களில்
நீர் பாசனம் அதிகமாக உபயோகிக்கப்படுகிறது.
இது நிலத்தில் நீர் குறைவதற்கான காரணமாகும். கிளிநொச்சி மற்றும் வவுனியா போன்ற வடக்கு பகுதிகளில், நீர் பாசனம் அதிகமாக
நடைபெறுவதால், நிலத்திற்குள்
இருக்கும் நீர் குறைவடையும் மற்றும் சில நேரங்களில் உப்பு கலக்கும்.
4. சுற்றுச்சூழல் நிலைமைகள் (Environmental Conditions):பருவநிலை மாற்றங்கள்
மற்றும் வறட்சியால் தரைகீழ் நீர் வளம் பாதிக்கப்படுகின்றது. குறிப்பாக வடக்கு
மற்றும் கிழக்கு பகுதிகளில், வறட்சிக்காலங்களில் தரைகீழ் நீரின் அளவு குறைவாகவும், உப்பு நீரின் கலப்பு
அதிகமாகவும் காணப்படுகிறது. இதன் காரணமாக, யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் தரைகீழ் நீரை
சுத்திகரிக்க சிறப்பு முறைகள் அவசியமாகின்றன.
5. நில உபயோக மாற்றங்கள் (Land Use Changes):நிலத்தின் பயன்பாட்டில் ஏற்பட்ட மாற்றங்களால்
தரைகீழ் நீரின் பரம்பலும் அவற்றின் சேமிப்பு திறனும் பாதிக்கப்படுகிறது. வன
அழிப்பு மற்றும் கட்டிடக் கட்டுமானங்கள் அதிகரித்தல், நகரமயமாக்கம் என்பன தரைகீழ் நீர் வளங்கள் குறைய வாய்ப்பு உள்ளது.
உதாரணமாக, கொழும்பு மற்றும்
அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நகரமயமாக்கல் அதிகரித்ததன் காரணமாக தரைகீழ் நீர் அளவு
குறைவதாக உள்ளது.
இந்த காரணிகள் அனைத்தும் சேர்ந்து, இலங்கையின் தரைகீழ் நீர்
வளத்தை அமைக்கும் விதத்தில் முக்கிய பங்கினை வகிக்கின்றன. நிலத்தின் தன்மையும்
மனித செயல்பாடுகளும், குறிப்பாக
மழையும் சுற்றுச்சூழல் நிலைமைகளும், தரைகீழ் நீர் வளத்தின் சீரமைப்பு மற்றும் பரம்பலை
தீர்மானிக்கின்றன.
விவசாய கிணறுகள் நேரடியாகவும் மறைமுகமாகவும்
இரசாயன பதார்த்தங்கள் சென்றடைந்து நீரை மாசாக்கம் செய்தல் ,கோடை காலங்களில்
கூடுதலான நீரை பயிர்ச்செய்கை நடவடிக்கைகளுக்காக பெறுவதனால் உவர் தன்மையடைதல், கடல் நீர்
கலத்தல், இரசாயன பாவணை,கைவிடப்பட்ட நிலையில் பல
விவசாய கிணறுகள் காணப்படுவதோடு மாசடைந்த நிலையில் உள்ளதால் கொடிய பல நோய்களும்
ஏற்படல், நீர் மாசடைதல் போன்ற காரணிகளால் இலங்கையின் தரைகஈல் நீரானது
பலவாறு பாதிக்கப்படுகின்றது.
இவற்றை தடுக்க நீர் வழிகள் அசுத்தபடதலை தடுக்க
சட்ட நடவடிக்கைகளை உருவாக்கல்,நீண்ட மற்றும் குறுகிய
கால புலனாய்வுகள் மூலம் உப்புத்தன்மையை கட்டுப்படுத்தல், குழாய் கிணறுகளுக்கு நீர் வழங்கும் நீர் ஆதாரங்களை
பராமரித்தல் போன்ற நடவடிக்கைகள் இலங்கை அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டு
வருகின்றது.
தரைகீழ் நீர் என்பது
இலங்கையின் நீர்வள தேவைகளை பூர்த்தி செய்ய ஒரு அவசியமான மூலமாகும். மழை, புவியியல் அமைப்பு, மற்றும் மனித
செயல்பாடுகள் ஆகியவை இதன் நிலைமையை தீர்மானிக்கின்றன. இலங்கையின் நீர்வள
ஆதாரங்களில் தரைகீழ் நீர் முக்கிய பங்கு வகிக்கும் போது, அதனைச் சிக்கனமாகவும்
சரியான முறையிலும் பயன்படுத்துவது அவசியமாகின்றது. நீரின் தேவைகளைப் பூர்த்தி
செய்ய தரைகீழ் நீரை நவீன முறையில் பராமரிக்கவும் அதன் நிலைத்தன்மையை
உறுதிப்படுத்தவும், மழைப்பாதுகாப்பு
மற்றும் நீர் மேலாண்மை முறைகளை மேம்படுத்தவும் செய்தல் வேண்டும்.